யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது - வனப்பாதுகாவலர்

வறட்சி காலங்களில் நீருக்காக யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க கோவை வனக்கோட்டத்தில் 105 தண்ணீர் தொட்டிகள் சீரமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக கோவை கோட்ட வனப்பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

கோவை: வறட்சி காலங்களில் நீருக்காக யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க கோவை வனக்கோட்டத்தில் 105 தண்ணீர் தொட்டிகள் சீரமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக கோவை கோட்ட வனப்பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

யானைகள் மனித மோதலைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட களிறு திட்டம் குறித்து ஊடகவியலாளருடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று கோவை சாடிவயல் யானைகள் முகாமில் நடைபெற்றது. இதில் சாடிவயலில் உள்ள கும்கி யானை சுஜயை வைத்து யானைகளை வனத்திற்கு விரட்டும் முயற்சி குறித்தும் விவரிக்கப்பட்டது.

யானைகள் ஊருக்குள் புகுவது குறித்த கணக்கெடுப்பில் கடந்த ஒரு வருட காலத்தில் மட்டும் கோவையில் உள்ள 7 வனச்சரகங்களில் ஒருந்து 1806 முறை யானைகள் ஊருக்குள் நுழைந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலானவை உணவு தேடி விளை நிலையங்களில் புகுந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

எனவே, யானைகள் வந்த பின் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கையோடு, வனத்தில் இருந்து வெளியே வராமல் தவிர்க்க களிறு திட்டம் மூலம் ஒதுக்கப்பட்ட ரூ.1.38 கோடி நிதியை பயன்படுத்தி அகழி அமைப்பது, வனத்தில் தண்ணீர் தொட்டி அமைப்பது, மற்றும் யானைகளுக்குத் தேவையான உணவுகளை காட்டிலே விளைய வைப்பதற்கான ஆய்வும் திட்டம் குறித்தும் விவரிக்கப்பட்டது. மேலும் 7 வனச்சரகங்களில் யானைகள் அதிகம் நடமாடக் கூடிய 45 கிராமங்கள் கண்டறியப்பட்டு, போதிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து கோவை கோட்ட வனப்பாதுகாவலர் ராமசுப்புரமணியம் கூறுகையில், "கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தால் வன விலங்குகளுக்காக கோவை கோட்டத்தில் 105 தண்ணீர் தொட்டிகள் பராமரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் வாரம் ஒரு முறை நீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. 

மேலும், தற்போது சாடிவயல் யானைகள் முகாமிற்கு சேரண் , ஜான் என்ற 2 கும்கி யானைகள் முதுமலை யானைகள் முகாமில் இருந்து கொண்டுவரப்படுகிறது. சுஜய் , பாரி என்ற இரு கும்கி யானைகள் சாடிவயல் முகாமிலிருந்து வேறு முகாமிற்கு மாற்றப்பட உள்ளது." என்று அவர் கூறினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...