தமிழகத்தில் இருந்து பெரியார் சிலை அகற்றப்படும்: வன்முறையைத் தூண்டும் எச்.ராஜா பதிவு

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல் தமிழகத்தில் இருந்து பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க.தேசிய செயலாளர் வன்முறையைத் தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் செய்துள்ளார்.



திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல் தமிழகத்தில் இருந்து பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க.தேசிய செயலாளர் வன்முறையைத் தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

திரிபுரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்ற கையேடு அம்மாநிலத்தில் இருந்த லெனின் சிலையை அகற்றியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா அவரின் சமூக வலைதள பக்கத்தில், "லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை , நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே. ராமசாமியின் சிலை." என்று பதிவிட்டுள்ளார். 

அமைதிப் பூங்காவான தமிழகத்தில் எச்.ராஜா போன்ற சிலர் வன்முறையைத் தூண்டும் விதமாக பதிவுகளை இடுவது கண்டனத்திற்கு உரியது என்று பல்வேறு தரப்பினரும் அவருக்குக் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், "யார் அகற்றப்படும் என்று கூறுகிறாரோ அவரும் அகற்றப்படுவார். சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...