பெரியார் சிலை விவகாரம் : எச். ராஜாவை கைது செய்ய வலியுறுத்தல்

பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவை கைது செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

கோவை : பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவை கைது செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தினர். 



திரிபுராவில் பா.ஜ.க., வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் உலகத் தலைவர் லெனின் சிலை அகற்றப்பட்டு இருக்கிறது. இது இந்தியா முழுக்க சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இந்த சர்ச்சை அடங்கும் முன் லெனின் சிலை போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். அவரது கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா உருவப் படத்தை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் மாரியப்பன் பேசியதாவது :- லெனினின் சிலை உடைக்கப்பட்டது போல பெரியார் சிலை உடைக்கப்படும் எனக் கூறியது கண்டனத்துக்குரியது. எச். ராஜாவை பா.ஜ.க.,வில் இருந்து நீக்க வேண்டும். கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் ராஜாவை தமிழக அரசு கைது செய்ய வேண்டும். இந்திய மாணவர் சங்கம் மூலம் அனைத்து மாணவர்களையும் இணைத்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...