சிரியா தாக்குலை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

சிரியாவில் நடைபெற்று வரும் தாக்குதலை கண்டித்து கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : சிரியாவில் நடைபெற்று வரும் தாக்குதலை கண்டித்து கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசுப் படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவித்து வருகின்றனர். இதற்கு எதிராக தமிழகத்தில் இருந்து கண்டனக் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 

அந்த வகையில், சிரியாவில் நடைபெறும் தாக்குதலை கண்டித்தும், போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிரியா மற்றும் ரஷிய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார். போராட்டத்தின் போது திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிரியா நாட்டு கொடியை எரித்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்ட போலீசார் தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து, சிரியா அரசின் தாக்குதலால் பலத்த காயங்களுடன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதை சித்தரிக்கும் வகையில் கட்டு போட்டும் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துவது போல போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...