சிரியா அரசைக் கண்டித்து அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் சார்பில் குழந்தைகள் பேரணி

சிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் ரஷ்யா அரசை கண்டித்து திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் குழந்தைகள் கலந்து கொண்ட கண்டன பேரணி நடைபெற்றது.

திருப்பூர் : சிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் ரஷ்யா அரசை கண்டித்து திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் குழந்தைகள் கலந்து கொண்ட கண்டன பேரணி நடைபெற்றது. 



பெரியதோட்டம் பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் சிரியாவில் இருந்து ரஷ்யா ராணுவம் வெளியேற வேண்டும் என்றும், ஐ.நா. சபை இந்த மனித உரிமை மீறல் விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சிரியா விவகாரத்தில் இந்திய அரசு அமைதி காப்பதை தவிர்த்துவிட்டு சிரியா மக்களின் பாதுகாப்பிற்காக குரல் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்தப் பேரணியானது, முக்கிய வீதிகளின் வழியாக சென்று காங்கயம் சாலையில் உள்ள அல் அமீன் பள்ளியில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, சிரியாவில் இறந்தவர்களுக்காகச் சிறப்பு தொழுகை நடத்தி பிரார்த்தனையும் செய்தனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...