கோடைக்கு முன்பே வறண்டு வரும் நீர்த்தேக்கங்கள் : பொதுமக்கள் கவலை

நீலகிரி மாவட்டத்தில் முக்கிய நீராதாரமாக திகழும் நீர்த்தேக்கங்கள் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வறண்டு வருவதால், பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.


நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் முக்கிய நீராதாரமாக திகழும் நீர்த்தேக்கங்கள் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வறண்டு வருவதால், பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 



கோடை காலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், குன்னூரில் தற்போதே கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகரில் உள்ள 30 வார்டுகளுக்கு நீர் விநியோகிக்கும் முக்கிய நீராதாரமான ரேலியா அணையில் மட்டுமே 39 அடி நீர் இருப்பு உள்ளது. கோடை கால தேவைக்காக இந்த அணையிலிருந்து நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சிறிய அளவிலான பந்துமி, ஜிம்கானா, கரடிபள்ளம் ஆகிய பிற நீராதாரங்களை தண்ணீர் தேவைக்காக மக்கள் நம்பியிருந்தனர். 

இந்நிலையில், பனிக்காலம் மற்றும் பருவமழை பொய்த்துப் போனதால் பந்துமி நீர்த்தேக்கத்துக்கான நீர்வரத்து நின்று விட்டது. இதனால், நீர்வரத்து இல்லாமல் பந்துமி நீர்த்தேக்கம் முற்றிலுமாக வறண்டு விட்டது. தற்போது, நீரில்லாமல் நீர்த்தேக்கம் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. கடும் தண்ணீர் தட்டுப்பாட்டில் குன்னூர் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தண்ணீர் தேவையை சமாளிக்க மக்கள் நம்பியிருந்த நீராதாரங்கள் ஒவ்வொன்றாக வறண்டு வருவது மக்களை கவலையடைய செய்துள்ளது. 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...