வரி பாக்கி வைக்கும் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் : மாநகராட்சி எச்சரிக்கை

குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளை செலுத்தாமல் இருக்கும் குடியிருப்புகளின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும் என கோவை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை : குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளை செலுத்தாமல் இருக்கும் குடியிருப்புகளின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும் என கோவை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கோவை மாநகராட்சிக்கு 2017-2018-ம் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்திற்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட வரியினங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்த ஏதுவாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் தினசரி மாலை 5.00 மணி வரை செயல்பட்டு வருகின்றன. வரிவசூல் பணியினைத் தீவிரப்படுத்தும் பொருட்டு, சொத்துவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள வரிதாரர்களின் நிலுவைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு செய்யும் பணிகள் முடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, சொத்துவரி நிலுவை வைத்துள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களின் 27 குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

எனவே, மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் சொத்துவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள வரிதாரர்கள் உடனடியாக நிலுவைத் தொகைகளை செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறும், குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...