கோவையில் பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பெரியார் சிலைகளை தமிழகத்தில் இருந்து அகற்றுவோம் என்ற எச்.ராஜா-வின் பதிவுக்கு எதிராக கோவையில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.


கோவை: பெரியார் சிலைகளை தமிழகத்தில் இருந்து அகற்றுவோம் என்ற எச்.ராஜா-வின் பதிவுக்கு எதிராக கோவையில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 



திரிபுராவில் பா.ஜ.க. வெற்றி பெற்ற கையோடு அம்மாநிலத்தில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலைகள் அகற்றப்பட்டது. 

இந்த சூழலில், திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேஸ்புக் பதிவு செய்திருந்தார். 

இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பியது. 

இந்நிலையில், இன்று அதிகாலை கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர்.



இது குறித்து அந்த அலுவலகத்தில் தங்கியிருந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார் கூறுகையில், "இன்று 3.10 மணியளவில் சத்தம் கேட்டது. உடனடியாக வெளி வந்து பார்த்தேன். அப்போது மூன்று பேர் எங்கள் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். 

அதில் ஒரு குண்டு சாலை நடுவே விழுந்து எரிந்தது. மற்றொன்று பிளக்ஸ் போர்டு மீது விழுந்தது. இதைப் பார்த்த போலீசார் அவர்களை விரட்டினர். ஆனால், அதற்குள் அந்த மூன்று பேரும் தப்பியோடிவிட்டனர்." என்றார்

தொடர்ந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து, கோவையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.



காந்திபுரம், புலியகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள பெரியார் சிலைகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...