'அவர் பேர சொல்ல உனக்கென்ன தகுதி இருக்கு?' - எச்.ராஜாவை விளாசும் நெட்டிசன்ஸ்

தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு சமூகவலைத்தள பயன்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கோவை: தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு சமூகவலைத்தள பயன்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல் தமிழகத்தில் இருந்து பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திருப்பத்தூரில் பெரியார் சிலையை பா.ஜ.க. பிரமுகர்கள் சேதப்படுத்தினர்.

இதற்கு பதிலாக அடையாளம் தெரியாத சிலர் இன்று அதிகாலை கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். 

தொடர்ந்து, பெரியார் சிலை குறித்து பேஸ்புக் பக்கத்தில் தான் எந்த பதிவும் செய்யவில்லை என்றும். தனது அனுமதியின்றி பேஸ்புக் அட்மின் அவ்வாறு பதிவிட்டதாகவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பதிவில், "தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது." என்று பதிவு செய்துள்ளார்.

இதற்கு, தமிழகத்தில் சாதிய அரசியல் செய்து ஆதாயம் பெற முயல்வதாக எச்.ராஜா மீது சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் குற்றம் சட்டி வருகின்றனர்.

புதிய பேஸ்புக் பதிவின் கீழ் அவரை மானாவாரியாக வறுத்தெடுத்து வரும் நெட்டிசன்கள், "முத்துராமலிங்கத் தேவரின் பெயரை உபயோகித்து அரசியல் பேச உனக்கென்ன தகுதி இருக்கின்றது." என்று கோபத்துடன் கேள்வியெழுப்பி வருகின்றனர்.



அதோடு, காதில் ரத்தம் வரும் அளவிற்கு மானாவாரியாக விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...