நீலகிரியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அதிரடி ஆய்வு

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறி.வாகனங்கள் இயக்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் நேற்று அதிரடி ஆய்வினை மேற்கொண்டார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறி.வாகனங்கள் இயக்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் நேற்று அதிரடி ஆய்வினை மேற்கொண்டார்.

மலை மாவட்டமான நீலகிரியில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் அதிரடி சோதனை நடத்திட போக்குவரத்து அலுவலர் லட்சுமிபதிராஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் நேற்று போக்குவரத்து ஆய்வாளர் சக்திகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அதிகளவு வாகனங்கள் இயக்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிவந்த ஜீப், பயணிகளை ஏற்றிச் செல்லும் கார், உணவு பொருட்கள் ஏற்றிச் செல்லும் ஜீப் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாத மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் நிறுத்தப்பட்டு அந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆய்வின் போது போக்குவரத்து ஆய்வாளர் சக்திகுமார் கூறுகையில், "18 வயதுக்கு உட்பட்டோர் கண்டிப்பாக வாகனங்களை இயக்கக் கூடாது. இது சட்டத்தை மீறிய செயலாகும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் வாகனத்தை இயக்கும் போது தான் பெரும்பாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அனைவரும் கண்டிப்பாக போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்து பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும்." என்றார்.

இந்த சோதனையின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கிய பல்வேறு வாகன ஓட்டுநர்களுக்கு மொத்தம் ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...