கேரள அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினர் கைது

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் இடத்தில் போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட அனைத்துக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் இடத்தில் போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட அனைத்துக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.



பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை கட்டி வருகின்றது. முன்னதாக தேக்குவட்டை, மஞ்சகண்டி ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது தடுப்பணையை கோட்டத்துறை என்ற இடத்தில் கட்டி முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றது.

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், ஆதி தமிழர் பேரவை நிறுவனர் ஆதியமான், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ, மற்றும் விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கேரளாவிற்கு தடுப்பணையை பார்வையிட சென்றனர்.



அவர்களை மாநில எல்லைப் பகுதியான ஆனைகட்டியில் தமிழக காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அனைத்து கட்சியினர் கேரள அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தியதுடன் மறியலிலும் ஈடுபட்டனர். தடுப்பணை கட்ட கூடாது என்ற கோரிக்கை தொடர்பாக கேரள முதலமைச்சரை நேரடியாக சந்தித்து பேச இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

இதனையடுத்து, அனைத்துக் கட்சி குழுவினர் கேரள பகுதிக்குள் சென்றால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...