கோவையில் மண்பானை விற்பனை அதிகரிப்பு

கோவையில் வெயில் 'சக்கைப் போடு-போட' துவங்கிவிட்டது. மதிய நேரங்களில் வெளியில் செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த கோடை வெயிலின் தாகத்தை தணிக்க மக்கள் குளிர்ச்சி மிகுந்த தண்ணீரை விரும்பி அருந்துகின்றனர்.

கோவை: கோவையில் வெயில் 'சக்கைப் போடு-போட' துவங்கிவிட்டது. மதிய நேரங்களில் வெளியில் செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த கோடை வெயிலின் தாகத்தை தணிக்க மக்கள் குளிர்ச்சி மிகுந்த தண்ணீரை விரும்பி அருந்துகின்றனர்.

இதன் காரணமாக, மின்சார செலவே இல்லாமல் நீரை குளிர்விக்கும் மண்பானையைத் தேடி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், கோவையில் மண்பானை விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

கவுண்டபாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மண்பாண்ட விற்பனை மையங்கள் உள்ளன. இங்கு செம்மண், களிமண், வண்டல் மண் போன்ற மண்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகைகளில் மண்பாண்டங்கள் விற்பனைக்கு உள்ளன.



ஐந்து வகை அளவில் இந்த மண்பானைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. 

இதன் விலை ரூ.40 முதல் ரூ.150 வரை உள்ளது. கடந்த வருடத்தை விட இந்தாண்டு விலை சற்று உயர்வாக காணப்பட்டாலும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்வதாக மண்பானை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.



இது குறித்து மண்பானை விற்பனையாளர் செல்வராஜ் கூறுகையில், "மண் கிடைப்பதில் தட்டுப்பாடு காரணமாக தற்போது மண்பானை விலை சற்று உயர்வாக காணப்படுகிறது. எனினும் மக்கள் எங்களை புரிந்துகொண்டு வாங்கிச் செல்கின்றனர். மக்களிடையே இயற்கை முறைகள் குறித்த விழிப்புணர்வு அதிக அளவு ஏற்பட்டுவிட்ட காரணத்தினால் மண்பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது." என்றார்.

இது குறித்து வாடிக்கையாளர் முருகன் கூறுகையில், "கடந்த மூன்று வருடங்களாக மண்பானைகளை உபயோகித்து வருகின்றேன். வருடம் ஒரு முறை பழைய மண்பானைகளை மாற்றி புதிய மண்பானைகளை வாங்கிவிடுவேன். இதில் தண்ணீர் குடிப்பதால் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மேலும் இதில் சமைத்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. தற்போது வெயில் காலம் தொடங்க ஆரம்பித்துவிட்டதால் முன்னரே மண்பானைகளை வாங்கி வைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன்." என்றார்.

மண்பானைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் கட்டுவதால் அதன் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...