பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு : மேலும் ஒருவர் சரண்

கோவை பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் இருவர் சரணடைந்த நிலையில் மேலும் ஒரு நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கோவை: கோவை பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் இருவர் சரணடைந்த நிலையில் மேலும் ஒரு நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம் மீது இன்று அதிகாலை சில நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுத் தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சி அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்த சம்பவம் தொடர்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த பாலன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய கவுதம் என்ற தந்தை பெரியார் திராவிடர் கழக உறுப்பினர் சாயிபாபாகாலனி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக, சரணடைந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...