காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல் : 3-வது நாளாக அ.தி.மு.க., எம்.பி.க்கள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க., எம்.பி.க்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம், கர்நாடகம் இடையிலான காவிரி நிதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில் காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஒதுக்கிய 192 டிஎம்சி நீரை 177.25 டிஎம்சி நீராகக் குறைத்து திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. இதன் மூலம் கர்நாடக மாநிலத்துக்கு கூடுதலாக 14.75 நீரை ஒதுக்கீடு செய்தது. அதாவது கர்நாடக மாநிலத்துக்கு காவிரி நடுவர் மன்றம் 270 டிஎம்சி நீர் ஒதுக்கிய நிலையில் இப்போது 284.75 டிஎம்சி நீர் ஒதுக்கியது.

பெங்களூரு மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு கூடுலாக 4.75 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்தது. இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும், அடுத்த 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

இதனிடையே, காவிரி மேலாண்மையை வாரியத்தை உடனே அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த இரு தினங்களாக தி.மு.க., அ.தி.மு.க., இடதுசாரிக் கட்சி எம்.பி.க்கள் காந்தி சிலையின் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்றும், தமிழகத்தை வஞ்சிக்கக் கூடாது குரல் எழுப்பினர்.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அ.தி.மு.க., எம்.பி.க்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...