எச். ராஜாவை கைது செய்யக் கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சைக்குரிய பதிவையிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உதகை: பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சைக்குரிய பதிவையிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

திரிபுராவியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, பா.ஜ.க. முதல்முறையாக ஆட்சியமைத்துள்ளது. இதனையடுத்து பா.ஜ.க.வினர் திரிபுராவில் இருந்த லெனின் சிலையை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு அகற்றினர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து, திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியது போல தமிழகத்திலும் பெரியார் சிலை அகற்றப்படும் என பா.ஜ.க., தேசிய செயலாளர் எச்.ராஜா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் கண்டன குரல் எழுப்பி வரும் நிலையில், தி.மு.க., கட்சியினர் எச்.ராஜாவின் பதிவை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக உதகையில் மாவட்ட மற்றும் நகர தி.மு.க., சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதகை மத்திய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கா. ராமசந்திரன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், நகர செயலாளர் ஜார்ஜ், முஸ்தபா உள்ளிட்ட தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரியார் சிலையை அகற்றுவேன் எனக் கூறிய எச். ராஜாவை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...