கடன் பத்திரங்களை திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகப் புகார் : வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்

நீதிமன்ற உத்தரவின் படி விவசாயிக்குக் கடன் பத்திரங்களை திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகக் கூறி பல்லடம் பகுதி விவசாயிகள் கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையை முற்றுகையிட்டனர்.

திருப்பூர்: நீதிமன்ற உத்தரவின் படி விவசாயிக்குக் கடன் பத்திரங்களை திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகக் கூறி பல்லடம் பகுதி விவசாயிகள் கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையை முற்றுகையிட்டனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் வாவிபாளையம் செல்லாந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரத்தினசாமி(46). இவர் கடந்த 2002-ம் ஆண்டு கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கிக்கிளையில் பயிர்க்கடன் பெற்றுள்ளார். 

போதிய மழையின்மை, வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயி ரத்தினசாமி அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து வங்கிக் கிளை நிர்வாகம் திருப்பூர் சார்பு நீதிமன்றத்தில் கடன் குறித்து வழக்கு ஒன்றை தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், விவசாயி ரத்தினசாமிக்கு ஆதரவாக கடனை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்ததாகவும் கூறப்படுகிறது. 

மேலும், கடன் தொகைக்கான ஆவணங்களையும் விவசாயிடம் திருப்பித் தருமாறு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ரத்தினசாமி பலமுறை வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோதும் ஆவணங்களை திர்ப்பித் தராமல் காலதாமதம் செய்தும் அலைக்கழித்துள்ளனர். 

இதனால், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து தலைமையில் வங்கிக்கிளை அருகே திரண்ட விவசாயிகள் திடீர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பத்திரங்களைத் தரவேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஒட்டுமொத்த விவசாயிகளைத் திரட்டி மறியல் உள்ளிட்ட பல கட்டப் போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காமநாயக்கன்பாளையம் சம்பவ இடத்திற்குச் சென்று இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து ஆவணங்களை உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என வங்கி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....