டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனான காம்பீர்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். 

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதற்கான வீரர்களின் ஏலமும் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக அனைத்து அணிகளின் வீரர்களும் ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக, சென்னை, ராஜஸ்தான் அணிகள் 2 ஆண்டுகள் தடைகாலம் முடிந்து மீண்டும் களம்புகுவதால், ஐ.பி.எல். மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நியமிக்கப்பட்டதை அணியின் தலைமை நிர்வாகி ஹேமந்த் துவா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ‘கவுதம் கம்பீரை கேப்டனாக நியமிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் மீண்டும் டெல்லி அணியின் கேப்டனாக விளையாட உள்ளார்’ என அவர் குறிப்பிட்டிருந்தார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கவுதம் காம்பீர் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டனாக கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 7 ஆண்டுகள் விளையாடி உள்ளார். ஆனால் இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை தக்க வைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரஸல் மற்றும் சுனில் நரைன் ஆகியோரை தக்க வைத்தது. இதனால், அதிருப்தியடைந்த காம்பீர், ஏலத்தின்போது தன்னை ஏலம் கேட்க வேண்டாம் என்றும், ரைட் டூ மேட்ச் கார்டு மூலம் தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டாம் என நிர்வாகத்திடம் கூறியிருந்தார். இதனால், டெல்லி அணி 2.8 கோடி ரூபாய் கொடுத்து காம்பீரை வாங்கியது. காம்பீர் இதற்கு முன் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...