எச். ராஜாவின் உருவப்படத்தை காலணியால் அடித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலை தொடர்பாக முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டிருந்த எச்.ராஜாவின் உருவப்படத்தை காலணியால் அடித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : பெரியார் சிலை தொடர்பாக முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டிருந்த எச்.ராஜாவின் உருவப்படத்தை காலணியால் அடித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திரிபுராவில் லெனின் சிலையை பா.ஜ.க.வினர் அகற்றியது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா முகநூலில் திரிபுராவில் இன்று லெனின் சிலை, தமிழகத்தில் நாளை சாதி வெறியர் ஈ.வே.ரா சிலை என பதிவிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், எச்.ராஜா மற்றும் பா.ஜ.க.வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கோவை உக்கடம் பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எச். ராஜாவை கண்டித்து கோசங்களை எழுப்பி அவரது உருவப் படத்தை காலணியால் அடித்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல, இன்று மாலை கோவை பெரியார் படிப்பகம் முன்பு, புரட்சிகர இளைஞர் முண்ணனி, புரட்சிகர மாணவர் முண்ணனி சார்பில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, வன்முறையை தூண்டும் வகையில் பேசும் எச். ராஜாவை, தமிழக அரசு சிறையில் அடைக்க வேண்டும் என்றும், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., ஆகியவை தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினர். பின்னர், எச். ராஜாவின் உருவப் படத்தை தீ வைத்து எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். 

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...