நீர்நிலைகளை சிறந்த முறையில் பேணி காப்பதில் கோவைக்கு 3-ம் இடம்

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நீர்நிலைகளை சிறந்த முறையில் பேணி காப்பதில் 3-வது இடத்தைப் பிடித்த கோவை மாவட்டத்திற்கான விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சியர் த.ந. ஹரிஹரன் பெற்றுக் கொண்டார்.

கோவை : தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நீர்நிலைகளை சிறந்த முறையில் பேணி காப்பதில் 3-வது இடத்தைப் பிடித்த கோவை மாவட்டத்திற்கான விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சியர் த.ந. ஹரிஹரன் பெற்றுக் கொண்டார். 

தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான 3 நாள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதன் இறுதி நாளான இன்று, சிறந்து விளங்கிய ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அந்த வகையில், பொதுப்பணித்துறை சார்பில் வண்டல் மண் அகற்றி நீர்நிலைகளை சிறந்த முறையில் பேணியதற்காக கோவை மாவட்டத்திற்கு 3-வது இடத்திற்கான விருது வழங்கப்பட்டது. அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரனிடம் வழங்கினார். 



இதேபோல, தமிழக அரசு சார்பில் தமிழகத்தின் சிறந்த ஆட்சியர், மாநகராட்சி, ஆணையர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த ஆட்சியர்களாக பொன்னையா (காஞ்சிபுரம்), ரோகிணி (சேலம்), சுப்பிரமணியன் (விழுப்புரம்) ஆகியோருக்கும், சென்னை மாநகராட்சி சிறந்த மாநகராட்சிக்கும், சிறந்த போலீஸ் ஆணையராக சென்னை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கான விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....