புகார் அளிக்கச் சென்றவர்களை தரக்குறைவாகப் பேசிய ஆய்வாளர்: காவல் நிலையம் முற்றுகை

புகார் அளிக்கச் சென்றவர்களை தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளரைக் கண்டித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.

திருப்பூர்: புகார் அளிக்கச் சென்றவர்களை தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளரைக் கண்டித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.



திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த சண்முகம் - மகாலட்சுமி தம்பதியினர். இவர்களது 17 வயது மகள் அவினாசி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.

இவருக்கும் கல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். 

இந்நிலையில், காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து சண்முகத்தின் 17 வயது மகள் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில், தனது மகளை ஏமாற்றிய மாதவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சண்முகம் மற்றும் அவரது மனைவி நேற்று திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், அவர்களது புகாரை பெற மறுத்த காவல் ஆய்வாளர் தென்னரசு அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, தகாத வார்த்தைகள் பேசிய காவல் ஆய்வாளரைக் கண்டித்து பா.ஜ.க.வினர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர உதவி ஆணையரிடம் மனு அளித்தனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வெள்ளிக்கிழமை மாலை பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...