கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த சம்பவம் : தலைமை நீதிபதி மற்றும் தலைவர்கள் கண்டனம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழப்பு சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழப்பு சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்ற தர்மராஜ், 3 மாத கர்ப்பிணி பெண்ணான தனது மனைவி உஷாவை நேற்று இரவு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் காமராஜ், ஹெல்மெட் அணியாத காரணத்தால், ராஜாவின் வாகனத்தை துரத்திச் சென்று எட்டி அவர்களது இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்துள்ளார். இதில், நிலை தடுமாறிய ராஜா நடுரோட்டில் மனைவியுடன் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் உஷா மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

இந்தச் சம்பவத்தையடுத்து, பெண் பலியான சம்பவத்தில் தொடர்புடைய ஆய்வாளரை கைது செய்யக் கோரி சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், போலீஸார் மீதும், அவர்களது வாகனங்கள் மீதும் சிலர் கல்வீசி தாக்கினர். இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் இந்த சம்பவத்தை ஏற்படுத்திய போலீசாரின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, திருவெறும்பூரில் பெண் உஷா உயிரிழப்பு சம்பவம் பற்றி நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஷ்வதாமன், டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். அப்போது, கர்ப்பிணி பெண் உஷா உயிரிழப்பு சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். போலீஸாரின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, சட்டவிரோதமான செயல். திருவெறும்பூர் சம்பவம் கிரிமினல் குற்றத்துக்கு சமமானது, இவ்வாறு கூறினார். 

ஸ்டாலின் கண்டனம் :

ஹெல்மெட் வாகன சோதனையின்போது பெண் பலியான சம்பவத்தைக் கண்டித்து அமைதியாகப் போராடிய பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது என தி.மு.க., செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "திருவெறும்பூரில் ஹெல்மெட் அணியாததால் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். மனிதநேயமற்ற இச்செயல் வேதனையளிப்பதோடு, இதனைக் கண்டித்து அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது" எனத் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் இரங்கல் :

இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "காவலர் காமராஜின் செயல்பாட்டால் உயிரிழந்த அப்பாவி கர்ப்பிணி பெண் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களைக் காக்க வேண்டிய காவல்துறை, மக்களை காவுவாங்கும் துறையாக இல்லாமல், சேவை செய்யும் காவல்துறையாக இருக்கவேண்டும், என்றார். 

அமைச்சர் ஜெயக்குமார் கருத்து :

சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், "திருச்சி அருகே நேற்று பெண் உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. கவலை கொள்கின்ற ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். இதில் கருணை காட்டவில்லை. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்ற வகையில் அந்த காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கும் தொடரப்பட்டுள்ளது," இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...