ஜெயலலிதாவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை ரஜினி, கமல் நிரப்ப முடியாது : நடிகை கவுதமி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை ரஜினி, கமல் நிரப்புவது நடைமுறையில் சாத்தியம் இல்லை என நடிகை கவுதமி தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை ரஜினி, கமல் நிரப்புவது நடைமுறையில் சாத்தியம் இல்லை என நடிகை கவுதமி தெரிவித்தார். 

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நடிகை கவுதமி இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது, தமிழக அரசியல் தொடர்பாகவும், ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசம் குறித்தும் கேட்டபோது, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது உண்மைதான். கமல் மற்றும் ரஜினி திடீரென அரசியலுக்கு வந்து தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடைமுறையில் சாத்தியம் இல்லை. இந்த வெற்றிடத்தை ஒரே நாளில் யாராலும் நிரப்ப முடியாது’ என்றார் கவுதமி.

திருச்சியில் ஆய்வாளர் எட்டி உதைத்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழந்தது வேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார். மேலும், மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிரைப் பெருமைப்படுத்தும் வகையில், நடிகை கவுதமி நடித்த ‘மகளே’ என்ற குறும்படம் இன்று வெளியாகிறது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...