மூதாட்டியை மீட்டு மகளிடம் ஒப்படைத்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை

கோவையில் தனியாக தவித்த மூதாட்டியை மீட்ட ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர் அவரது மகளிடம் சேர்த்துள்ளனர்.

கோவை: கோவையில் தனியாக தவித்த மூதாட்டியை மீட்ட ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர் அவரது மகளிடம் சேர்த்துள்ளனர்.

கடந்த 6-ம் தேதி கோவை ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள குப்பை கிடங்கு பகுதியில் ஆதரவற்ற நிலையில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரை இருந்தார். 

அவர் மீட்கப்பட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அந்த மூதாட்டியின் உறவினரைத் தேடும் முயற்சியை ஈரநெஞ்சம் அறக்கட்டளை மேற்கொண்டது. 

தொடர்ந்து, அந்த மூதாட்டியின் பெயர் சபீரா என்பதும் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஆயிஷா என்பவரது தாய் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஆயிஷா-வுக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்கு சென்ற அவர் தனது தாயைப் பார்த்து கதறி அழுதார். 

மேலும், அவர் கூறும் போது, "குன்னூரில் எனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் 28-ம் தேதி அவர் வீட்டில் இருந்து மாயமானார். அன்று முதல் பல்வேறு இடங்களில் அவரை தேடினோம். ஆனால் கிடைக்கவில்லை. அம்மாவை காப்பாற்றி பராமரித்து எங்களிடம் ஒப்படைத்த ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்கு நன்றி." என்றார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....