சேலம் ரயில் நிலையம் அனைத்து மகளிர் ரயில் நிலையமாக மாற்றப்படும் - சேலம் ரயில்வே கோட்ட மேலாளர்

கோவை : சேலம் டவுன் ரயில் நிலையம் சேலம் கோட்டத்தின் முதல் அனைத்து மகளிர் ரயில் நிலையமாக மாற்றப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்துள்ளார். 



சேலம் கோட்ட தலைமை அலுவலகத்தில் உலக இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தெற்கு ரயில்வே உள்ள பன்னோக்குக் கருத்தரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தலைமை விருந்தினராக பங்கேற்றார்.  



விழாவில் அவர் பேசுகையில், "சேலம் கோட்ட நிர்வாகம் பெண் ஊழியர்களுக்காக பல்வேறு வசதிகளையும் மேம்பாடுகளையும் செய்து வருகிறது. எப்பொழுதும் எந்த ஒரு பெண் ஊழியர் விடுமுறை கோரி விண்ணப்பித்தாலும் எந்த ஒரு தடையும், மறுப்பும் இன்றி அவர்களுக்கு விடுப்பு வழங்கப்படுகிறது.



மேலும், சேலம் கோட்டத்தில் உள்ள சேலம் டவுன் ரயில்நிலையம் இக்கோட்டத்தின் முதல் அனைத்து மகளிர் ரயில் நிலையமாக மாற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் கோட்டத்தில் உள்ள ரயில்வே பள்ளிகளில் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் மற்றும் இதர ஊழியர்கள் உள்பட அனைத்து  உறுப்பினர்களும்  பெண்களாக கொண்ட அனைத்து மகளிர் கல்விக் கூடமாக மாற்றப்பட உள்ளது." என்றார்.

இவ்விழாவில், சேலம் கோட்ட முதுநிலை நிதி மேலாளர் உமா மகேஸ்வரி, சேலம் கோட்ட  பணியாளர் நல அலுவலர் எஸ். திருமுருகன், சேலம் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் கோட் செயலாளர் எம்.கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....