கோடநாடு காவலாளி கொலை வழக்கில் இருவருக்கு பிடி வாரண்ட்

கோடநாடு காவலாளி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத இருவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.

நீலகிரி : கோடநாடு காவலாளி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத இருவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிபதி வடமலை உத்தரவிட்டார். 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் தேயிலை எஸ்டேட் உள்ளது. அங்கு நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் கேரளாவை சேர்ந்த சயான், சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, வாளையாறு மனோஜ், மனோஜ் சமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்திலிருந்து மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்ட இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி வடமலை விசாரித்தார். விசாரணைக்கு உதயகுமார் மற்றும் பிஜின் ஆகிய இருவர் ஆஜராகவில்லை. அவர்கள் இருவரும் திருச்சூரில் உள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிற வழக்குகளில் ஆஜராகச் சென்றிருப்பதால், உதகை நீதிமன்றத்தில் இன்று இருவரும் ஆஜராகவில்லை என்று அவர்களின் வழக்கறிஞர் சிவகுமார் தெரிவித்தார். 

இதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி, வழக்கில் ஆஜராகாத பிஜின் மற்றும் உதயகுமார் ஆகியோருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். பின்னர், வழக்கை வரும் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.  மேலும், வழக்கு ஆவணங்களை மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்து தர வலியுறுத்தி சமர்ப்பிக்கப்பட்ட மனுவில், சட்டப்பிரிவுகளை முறையாக குறிப்பிட்டு மீண்டும் சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...