வழிதவறி ஊருக்குள் புகுந்த புள்ளிமானை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

கோவை மாவட்டம் மருதமலை அருகே வழிதவறி குடியிருப்பு பகுதிகளுக்கு சுற்றித் திரிந்த புள்ளி மானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.

கோவை : கோவை மாவட்டம் மருதமலை அருகே வழிதவறி குடியிருப்பு பகுதிகளுக்கு சுற்றித் திரிந்த புள்ளி மானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான மருதமலை வனப்பகுதிக்குள் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு 3 வயது மதிக்கத்தக்க புள்ளிமான்  கல்லீரம்பாளையம், ஐ.ஓ.பி. காலனி, பொம்மணம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, மூன்று நாட்களாக தேடப்பட்ட மான் இன்று காலை மருதமலை முருகன் நகர் குடியிருப்பு பகுதி அருகே ஒரு புதரில் இருப்பதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு மீண்டும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வன அதிகாரிகள், புள்ளிமானை பத்திரமாக மீட்டு, பாரதியார் பல்கலைக்கழகத்தின் வனப்பகுதி ஒட்டிய பின் பகுதியில் உள்ள நூறு நாள் குட்டை பகுதியில் விட்டனர். 

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....