வேளாண் பல்கலையில் 2 நாள் சர்வதேச விரிவாக்க மாநாடு இன்று தொடக்கம்

கோவையில் உள்ள தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாட்டை பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி இன்று துவக்கி வைத்தார்.

கோவை : கோவையில் உள்ள தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாட்டை பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி இன்று துவக்கி வைத்தார். 



இவ்விழாவில் சென்னை நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.என்.ஏ. ஜின்னா, மத்திய திட்டக்குழுவின் முன்னாள் வேளாண் ஆலோசகர்  வி.வி. சதாமத்தே ஆகியோரும் இந்தத் துவக்க விழாவில் பங்கேற்றனர். இம்மாநாட்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விரிவாக்க விஞ்ஞானிகள், அதிகாரிகள், ஆராய்ச்சி மாணவர்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி தனது துவக்க உரையில், குறைந்துவரும் சாகுபடி பரப்பு, வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் நீர் பாசனப் பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகளுக்கிடையே உணவு உற்பத்தியை உயர்த்திய பெருமையில் வேளாண் விரிவாக்க விஞ்ஞானிகள் வேளாண் விரிவாக்க அலுவலர்களின் பங்களிப்பை பாராட்டிப் பேசினார்.

மேலும், நமது வேளாண் விரிவாக்க அணுகுமுறைகள் அரசு மற்றும் தனியார் அமைப்புகளை ஒருங்கிணைந்து செயல்படும் வகையிலும், தேசிய மற்றும் உள்ளூர் சந்தைகளை ஒருங்கிணைக்கும் வகையிலும் செயல்பட வேண்டும் என்றும், விவசாயிகள் கடன் பெறுவது மற்றும் உபயோகித்தல் ஆகியவற்றை ஆய்வு செய்வதன் அவசியத்தைப் பற்றியும் குறிப்பிட்டார். வறட்சிக்கு இலக்காகும் பகுதிகளில் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற மாற்றுப் பயிர்கள் பற்றிய பரிந்துரைகளை பொதுவாகக் குறிப்பிடாமல் துல்லிய பரிந்துரைகளாக வழங்கமாறு கேட்டுக்கொண்டார்.

அடுத்தாகப் பேசிய சென்னை நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.என்.ஏ. ஜின்னா, நமது வேளாண் விhpவாக்க அணுகுமுறைகள் தற்போது பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருவதாக எடுத்துரைத்தார். 

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....