கோவை அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஹர்மந்தர்சிங் தலைமையில் நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஹர்மந்தர்சிங் தலைமையில் நடைபெற்றது.



 

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மை செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது :- கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை பேணும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து, தண்ணீர், தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுதல், குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பணி மேற்கொள்ள வேண்டும். தெருக்களில் உள்ள குப்பைத்தொட்டிகள் பழுதடைந்து இருந்தால் புதிதாக மாற்றி தெருக்களில் குப்பைகள் சேராமல் உடனுக்குடன் அப்புறப்படுத்தவேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தாங்கள் சார்ந்த பகுதிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த அலுவலர்கள் மூலம் அறிவுறுத்த வேண்டும். மேலும், கோவை மாவட்டத்தில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் கோடை காலத்திலும் கூட ஊரக மற்றும் மாநகர பகுதிகளில் போதிய அளவில் குடிநீர் வழங்க இயலும்.

நெடுஞ்சாலைத்துறையின் மூலம், முடியும் தருவாயில் உள்ள சாலைப்பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். மேலும், நெடுஞ்சாலைகளில் குறைவாக உள்ள குப்பைத்தொட்டிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படவேண்டும், மேலும், தற்பொழுது நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடித்து, அதன் தற்போதைய நிலைகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாயிலாக உடனடியாக அறிக்கை தெரிவிக்க வேண்டும். அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக எந்த வித சிரமமும் இன்றி உரிய நேரத்தில் சென்றடைய அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு கூறினார். 

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....