கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து வால்பாறை இன்று விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.


பொள்ளாச்சி: கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து வால்பாறை இன்று விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.



வால்பாறையில் பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை பொள்ளாச்சி கோட்ட கலால் அலுவலர் சியாமளா தலைமையேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். 



இதில் கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, “ஒழிப்போம் ஒழிப்போம் கள்ளச்சாராயத்தை ஒழிப்போம்”, “கள்ளச்சாராயம் குடித்தால் கண்பார்வை போய்விடும்” “கள்ளச்சாராயம் உயிருக்கு கேடு” “கள்ளச்சாராயம் குடித்தால் மலட்டுத்தன்மை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைளுடன் கோஷமிட்டு வால்பாறை பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு வால்பாறை முக்கிய வீதிகளின் வழியாக தபால் நிலையம் சென்றடைந்தனர். தொடர்ந்து, அங்கிருந்து பேரணியாக வாழைத்தோட்டம் வழியாக கல்லூரி வளாகம் வந்தடைந்தனர். 

இந்த பேரணியில் வால்பாறை வட்டாட்சியர் குணசேகரன், கல்லூரி துணை முதல்வர் குணசுந்தரி, வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....