வாய்க்காலில் குழந்தையின் எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு: போலீசார் தீவிர விசாரணை

திருப்பூர் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் குழந்தையின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் குழந்தையின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம் அருகே பொங்கலூர் தெற்கு அவினாசிபாளையத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பி.ஏ.பி., வாய்க்கால் மதகில் நேற்று மாலை குழந்தையின் எலும்புக்கூடுகள் இருந்ததைக் கண்டு அவ்வழியே சென்ற சிலர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவினாசிபாளையம் போலீசார், ஒரு மண்டை ஓடு, கை மற்றும் கால் எலும்புகளைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த எலும்புக்கூடுகள் சிறுவன் அல்லது சிறுமியுடையதா..? என்பது குறித்து ஆய்விற்குப் பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும், சமீபத்தில் காணாமல் போன சிறுவன் அல்லது சிறுமியின் உடலாகவும் இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். பல்லடம் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் குழந்தையின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....