சர்வதேச அளவில் முதலிடம் பிடித்த டெல்லி விமான நிலையம்

சர்வதேச விமான நிலைய சேவை தரவரிசை பட்டியலில் இந்தியாவின் டெல்லி விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச விமான நிலைய சேவை தரவரிசை பட்டியலில் இந்தியாவின் டெல்லி விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. 

சர்வதேச விமான நிலைய கவுன்சில், சர்வதேச அளவில் பரப்பளவு மற்றும் பயணிகள் வந்து செல்லும் விகிதத்தின் அடிப்படையில், விமான நிலையங்களின் சேவைத் தரத்தினை ஆண்டுதோறும் ஆராய்ந்து வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலை அந்த கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த விமான நிலையத்தில் ஆண்டுதோறும் 4 கோடிக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். 

மேலும், கடந்த ஆண்டு மட்டும் இங்கு 6 கோடி பயணிகள் வேறு நாடுகளுக்கு பறந்து உள்ளனர். இதன் அடிப்படையில், இந்திராகாந்தி விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் சீனாவின் பெய்ஜிங் விமான நிலையமும், மூன்றாவது இடத்தில் தைவானின் தைபேய் நகர விமான நிலையமும் உள்ளன. கடந்த ஆண்டு தென்கொரியாவின் இன்சியான் விமான நிலையம் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....