தனியார் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்பு பொருட்கள் சேதம்

திருப்பூரில் பனியன் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

திருப்பூர்: திருப்பூரில் பனியன் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (70). இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக கட்டடம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் முத்துசாமி பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். மற்றொரு பகுதியை ராயபுரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் (64) என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அதில், ஜெயப்பிரகாஷ் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், காலை முதல் ஜெயபிரகாஷ் நிறுவனத்தில் வெல்டிங் வேலை நடந்து வந்துள்ளது.

இதையடுத்து, மதியம் 12.30 மணி அளவில், வெல்டிங் பணி நடந்து கொண்டிருந்த போது, திடீரென தீப்பொறி அருகில் உள்ள தெர்மாகோலில் பிடித்துள்ளது. பின்னர் தீ மளமளவென குடோன் முழுவதும் வேகமாக பரவ துவங்கிவுள்ளது. இதைபார்த்த, ஊழியர்கள் பனியன் நிறுவனத்தில் இருந்து அலறியடித்து கொண்டு வெளியேறினார்கள். சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க போராடினார்கள். ஆனால், நிறுவனத்தில் அதிகப்படியான துணிகள் மற்றும் நூல்கள் இருந்ததால், தீ கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. பின்னர், கூடுதலாக தீயணைப்புத்துறை வாகனங்கள் மற்றும் தனியார் தண்ணீர் வாகனங்கள் என 5 வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

கட்டடத்தின் மேல் கூரைகள் முழுவதும் ஆஸ்பெட்டாஸ் சீட் என்பதால், நெருப்பு சூட்டிற்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெடித்து கீழே விழுந்தது. கட்டடத்தில் இருந்த கம்பிகளும் சாய்ந்தது. இதையடுத்து கட்டிடம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட நிட்டிங் மெஷின்கள், நூல்கள் மற்றும் துணிகள் எரிந்து சேதமாகியது. இதன் மதிப்பு சுமார் 3 முதல் 5 கோடி வரை இருக்கும் என நிட்டிங் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....