துப்பாக்கி முனையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் கொள்ளை முயற்சி

கோவை துடியலூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் போலீஸ் என்று கூறி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவை துடியலூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் போலீஸ் என்று கூறி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய மர்ம நபர்கள்  பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்பிர்த் சிங் (60). ரியல் எஸ்டேட் தோழில் செய்து வரும் அவரது வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் போலிசார் போல வந்தார். மேலும், தொழிலில் பாதுகாப்பு தருவதாக கூறினார். இதை ஹர்பிர்த் சிங் மறுத்துள்ளார். இந்த நிலையில், ஹர்பிர்த் சிங் நேற்று தனது காரில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது போலீஸ் என்று கூறிய அவரை வழிமறித்த மூன்று பேர் பாதுகாப்பு காரணங்களை சொல்லி அவரது காரில் ஏறினர்.

கார் சிறிது தூரம் சென்றதும், அந்த நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹர்பிர்த் சிங் கூச்சலிட்டார். 

இதனால் பயந்து போன மர்ம நபர்கள் துப்பாக்கியை காருக்குள்ளேயே விட்டு விட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் ஹர்பிர்த் சிங் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அத்துடன் காருக்குள் விட்டுச்சென்ற அந்த துப்பாக்கியை எடுத்து பரிசோதித்தனர்.  அப்போது அது பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...