இன்னும் நமக்கு ஆட்கள் தேவை : கமல் பேச்சு

செய்ய வேண்டிய வேலை அதிகமாக உள்ளது என்றும் அதற்கு இன்னும் ஆட்கள் தேவை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமலஹாசன் பேசியுள்ளார்.


கோவை : செய்ய வேண்டிய வேலை அதிகமாக உள்ளது என்றும் அதற்கு இன்னும் ஆட்கள் தேவை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமலஹாசன் பேசியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமலஹாசன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தார் விமானம் மூலம் கோவை வந்தார். கோவையில் இருந்து சாலை மார்க்கமாக ஈரோடு புறப்பட்டார். அப்போது, அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கமலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அப்போது அவர் பேசுகையில், "எந்த தைரியத்தில் அரசியலுக்கு வந்தீர்கள்? என்று கேட்டார்கள். உங்களை நம்பித்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். நல்ல தமிழகம் அமைய வேண்டுமென்றால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும்." என்றார். 



தொடர்ந்து ஈரோட்டில் தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், " நாம் செய்ய வேண்டிய வேலை அதிகமாக உள்ளது. இன்னும் நமக்கு ஆட்கள் தேவை. கட்டுப்பாடு நம் கட்சிக்கு அவசியம். அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். கட்சிக்கு புதிதாக வந்தவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகளை சொல்லிக் கொடுங்கள். நாம் எல்லோரும் இணைந்தால் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமையும். உங்கள் ஊர் குளம் சுத்தமாகும் அதற்காக உங்களுக்கு கை கொடுக்க வந்திருக்கிறது மக்கள் நீதி மையம். நான் வாக்குறுதி கொடுக்க முடியாது. உங்கள் பிரச்சினை குறித்து கலந்து ஆலோசிக்க அறிஞர் குழு இங்கே வரும். அவர்கள் மூலம் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொள்வேன்." என்றார்.

நிகழ்ச்சியில், தொண்டரின் பெண் குழந்தைக்கு கமலரஞ்சிதம் என்று பெயர் சூட்டினார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....