கோவை மற்றும் நீலகிரியில் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது.


கோவை : கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது.

தேசிய போலியோ ஒழிப்பு திட்டத்தின் கீழ் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்பட்டுவருகிறது. போலியோ நோயை முற்றிலுமாக ஒழிப்பதற்காக தேசிய போலியோ நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் இரண்டு கட்டங்களாக போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.



கோவையில் புரூக்பாண்ட் சாலையில் உள்ள சீத்தலட்சுமி மகப்பேறு மையத்தில் நடந்த இம்முகாமில் கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கினார். கோவையில் 33 மாநகராட்சி நகர் நல மையங்கள், 129 சத்துணவு கூடங்கள், 45 பள்ளிகள், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் போன்ற பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றுவருகிறது.

இப்பணியில் சுகாதார பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், செவிலியர் மாணவிகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன பணியாளர்கள் என 1404 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 1,61,787 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 49 மருத்துவ அலுவலர்கள் இப்பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல், உதகை அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்த முகாமை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் 30 முக்கிய சுற்றுலா தலங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மொபைல் வாகனங்கள், பேருந்து நிலையம், இரயில் நிலையம், மார்க்கெட் சோதனை சாவடிகள், 29 கோயில்கள், 52 கிறிஸ்துவ ஆலயங்கள் மற்றும் 6  மசூதிகளில் சொட்டு மருந்து மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், "சொட்டு மருந்து முகாமிற்காக 770 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 28-ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட முகாமில் மாவட்டம் முழுவதும் 45,096 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்." என்றார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....