கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி மரணம்

கொலை வழக்கிற்காக ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்ட கைதி ரீஸ்வான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மரணமடைந்தார்.

கோவை : கொலை வழக்கிற்காக ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்ட கைதி ரீஸ்வான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மரணமடைந்தார்.

கோவை சாய்பாபா காலனி கே.கே புதூரை சேர்ந்தவர் கமல் பாட்சா. இவரது மகன் ரிஸ்வான்(38). இவர் கடந்த 1997-ம் ஆண்டு ஆசிரியர் கிருஷ்ணசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றார். இந்நிலையில் இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 



இதனையடுத்து, ஒரு சில தினங்களுக்கு முன் பரோலில் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தவருக்கு நேற்று இரவு மீண்டும் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 10.15 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரிஸ்வான் இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உடற்கூறியல் துறையில் வைக்கப்பட்டுள்ளது. 



இந்நிலையில் சிறைத்துறையில் நேற்றிரவு போதுமான சிகிச்சை அளிக்காததால்தான் அவர் இறந்து விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து அவரது  உறவினர் இப்ராகிம் பாதுஷா கூறியதாவது, என் மைத்துனருக்கு இரவே உடல் நிலை சரியில்லை.ஆனால் சிறை துறை நிர்வாகம் மருத்துவ மனைக்கு இரவே அழைத்து வந்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார் என்றார்.

இது குறித்து இஸ்லாமிய கூட்டமைப்பை சேர்ந்த ஹக்கீம் கூறுகையில், "சிறைவாசிகளுக்கு போதிய சிகிச்சை இல்லாததால் சிறை மரணங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. சிறையில் சிறந்த மருத்துவர்கள் இல்லை. பார்மால்டிகளை கடந்து தான் அவசர சிகிச்சைக்கும் அனுமதிக்கப்படுவது வேதனையளிக்கிறது. சிறையில் உள்ள முறைகேடுகள் குறித்து பேசும் வரை நாங்கள் உடலை வாங்கமாட்டோம்."என்றார். 

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....