தேனியில் காட்டுத்தீயில் சிக்கிய கல்லூரி மாணவிகள் : சூலூரில் இருந்து விரைந்தது ஹெலிகாப்டர்



தேனி: தேனி மாவட்ட வனப்பகுதிக்குள் டிரக்கிங் சென்ற கல்லூரி மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கி போராடி வருகின்றனர். 

மகளிர் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணிக்கு திருப்பூர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த கல்லூரி மாணவிகள் 40 பேர் டிரக்கிங் சென்றனர். 

இந்த நிலையில், வனப்பகுதிக்குள் இன்று திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது  இந்த தீ மளமளவென வனம் முழுவதும் பரவியது. 

இதனால், டிரெக்கிங் சென்ற மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கி போராடினர். 

இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது  தகவலின் பேரில் தீயணைப்பு வாகனம் மற்றும் வனப் பாதுகாவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

கடுமையான போராட்டத்திற்கு பிறகு 12 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர். 

இந்த தகவலறிந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன், கோவை மாவட்டம் சூலூர் விமான படைதளத்தில் இருந்து இரண்டு ஹெலிகாப்டர்களை மீட்பு பணிக்கு அனுப்ப உத்தரவிட்டார். 

அதன்பேரில், சூலூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிக்காக சென்றது. அதில் 20 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் உள்ளனர். மேலும், தண்ணீர் டேங்குகள், கயிறு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் தீயில் இறங்கி மீட்புப் பணியை மேற்கொள்ளத்தக்க உடைகள் ஆகியவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....