சிறையில் மரணமடைந்த கைதியின் உடல் அடக்கம் : சீமான், தனியரசு ஆகியோர் மரியாதை

கோவை சிறையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த கைதி ரிஸ்வானின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கோவை : கோவை சிறையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த கைதி ரிஸ்வானின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள்தண்டனைக் கைதியான ரிஸ்வான் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். சிறையில் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், ரிஸ்வானின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக மேம்பாலம் வழியாக ப்ரூக்பாண்ட் சாலையைக் கடந்து, ஹைதர் அலி திப்பு சுல்தான் தக்னி சுன்னத் ஜமாத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, உடல் வைக்கப்பட்டு, அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க ஊர்வல கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.



பின்னர், ரிஸ்வானின் உடல் சாய்பாபா காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு மற்றும் இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்த பலர் மரியாதை செலுத்தினர். பின்னர், மீண்டும் பூமார்க்கெட்டில் உள்ள பள்ளி வாசலுக்கு உடல் கொண்டு வரப்பட்டு, அவருக்கு இஸ்லாமியர் முறைப்படி கடைசி மரியாதை செலுத்தப்பட்டது. இறுதியில், ரிஸ்வானின் உடல் பூமார்கெட் பள்ளிவாசலில் உள்ள மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.



ரிஸ்வானின் இறுதிச் சடங்கையொட்டி, கோவை அரசு மருத்துவமனை, சாயிபாபா காலனி, வடகோவை, பூமார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....