குரங்கணி தீவிபத்தில் படுகாயமடைந்த பெண் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை வருகை

குரங்கணி தீ விபத்தில் படுகாயம் அடைந்த சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

கோவை : குரங்கணி தீ விபத்தில் படுகாயம் அடைந்த சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.



தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 9 பேர் பலியாகினர். இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மதுரை, தேனி போன்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தீ விபத்தில் படுகாயமடைந்த சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (32), தனியார் மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக கோவை அழைத்து வரப்பட்டார். தீ காயமடைந்த ஜெயஸ்ரீயுடன் அவரது தாயார், மருத்துவர் உட்பட 4 பேர் உடன் வந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டார்.



கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சையானது அளிக்கப்பட இருக்கிறது. 70 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தோல் சிகிச்சைகள் வழங்க கோவை தனியார் மருத்துவமனையில் சிறப்பு வசதிகள் இருப்பதால், ஜெயஸ்ரீயின் பெற்றோர் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...