இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு திடீர் உடல்நலக்குறைவு

தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. 

தூம்-3 இயக்குநர் விஜய்கிருஷ்ணா ஆச்சர்யா இயக்கத்தில் 'தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்' என்ற படம் உருவாக்கப்பட்டு வருகிறது. அமீர்கான், கத்ரினா கைப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜோத்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அமிதாப்பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் மருத்துவர்கள் ஜோத்பூருக்கு விரைந்து உள்ளதாக ஆங்கில தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகியுள்ளது. 

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப்பச்சன் விரைவில் உடல் நலம் தேற வேண்டும் என்று டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...