இந்தியாவில் மத வெறி ஆட்சி நடைபெறுகிறது : நல்லகண்ணு கடும் தாக்கு

தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது வழக்கமாகி விட்டதாகவும், இந்தியாவில் மத வெறி ஆட்சி நடைபெற்று வருவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

திருப்பூர் : தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது வழக்கமாகி விட்டதாகவும், இந்தியாவில் மத வெறி ஆட்சி நடைபெற்று வருவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார். 

திருப்பூரில் மாவட்டம் உடுமலையில் சங்கர் சமூக நீதி அறக்கட்டளை அறிமுக விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது இங்கு வழக்கமாகிவிட்டது. ஏனெனில், இந்தியாவில் மத வெறி கொண்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்பேத்கர், பெரியார் குறித்து கல்வி நிலையங்களில் பாடங்கள் வராமல் தடுக்கிறார்கள். ஆனால், சமஸ்கிருதத்தை முக்கிய பாடமாக புகுத்தி வருகின்றனர். இந்தியா என்பதை விட இந்து மதம் தான் முக்கியம் என்ற எண்ணத்தில் பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. கல்லூரிகளில் சமஸ்கிருதத்தை நுழைத்து பெரியார் மற்றும் அக்பேத்கர் கொள்கைகளை புறக்கணிக்கின்றனர். 

மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை விட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. விவசாய நிலங்களில் டவர் லைன் அமைக்கக் கூடாது." என்று அவர் பேசினார். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...