நெருப்பில் சிக்கியவர்களை காப்பாற்றிவிட்டு உயிர்நீத்த நிஷாவின் உடல் அடக்கம்

தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்தில் உடன் சென்றவர்களை காப்பாற்றிவிட்டு, 100 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்த நிஷா என்ற இளம்பெண்ணின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

தருமபுரி : தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்தில் உடன் சென்றவர்களை காப்பாற்றிவிட்டு, 100 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்த நிஷா என்ற இளம்பெண்ணின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ்ஒளி. இவர் சென்னையில் மத்திய தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவருக்கு நிஷா, நிரோஷா என இரு மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் நிஷா (30), பி.டெக். முடித்து இங்கிலாந்தில் எம்.எஸ். முடித்துள்ளார். தற்போது, சென்னையில் எல்.என்.டி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். 

கடந்த 8-ந் தேதி உலக மகளிர் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்ட மலையேறும் பயிற்சிக்காக சென்னையிலிருந்து புறப்பட்டு 9-ந் தேதி காலை தேனியை சென்றடைந்துள்ளனர். அங்கு 11-ம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீயில் டிரெக்கிங் சென்றவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். அப்போது, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மற்றவர்களுக்கு வழிகாட்டிய நிஷா, 100 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்தார். 

திருமணம் செய்து கொள்ளாத நிஷா பல வருடங்களாக டிரெக்கிங் சென்று வந்துள்ளார். இவர், டிரெக்கிங் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நிஷாவின் உடல் இன்று காலை பாப்பிரெட்டிப்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...