மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே கோடைக்கால சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீராவி எஞ்சின் மூலம் இயங்கும் பாரம்பரிய கோடைக்கால சிறப்பு ரயில் சேவைகள் வரும் 31-ம் தேதி முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீராவி எஞ்சின் மூலம் இயங்கும் பாரம்பரிய கோடைக்கால சிறப்பு ரயில் சேவைகள் வரும் 31-ம் தேதி முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தென்னக ரயில்வே, சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "நீலகிரி மலை ரயில் ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மாவின் முயற்சியின் காரணமாக, வரும் 31-ம் தேதி முதல் ஜுன் 24-ம் தேதி வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே நீராவி எஞ்சின் மூலம் (26+26 மொத்தம்) 52 பாரம்பரிய கோடைக்கால சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. 

இந்த ரயிலில் 2 முதல்வகுப்பு மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகள் இருக்கும். இந்த ரயில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, கல்லார், ஹில்குரோவ் வழியாக பயணித்து குன்னூரை மதியம் 12.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் மதியம் 1.30 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு, ஹில்குரோவ், கல்லார் வழியாக பயணித்து மேட்டுப்பாளையத்தை மாலை 04.20 மணிக்கு வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான கட்டண முன்பதிவு நாளை (14.03.2018) காலை 8.00 மணி முதல் தொடங்க உள்ளதால், சுற்றுலாப் பயணிகளும், இதர ரயில் பயணிகளும் இதற்கு தேவையான வரவேற்பு அளித்து இந்த சேவைகளை பெரும் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண விபரம் :

முதல் வகுப்பு :

மேட்டுப்பாளையம் - குன்னூர் : பெரியவர்கள் : Rs. 1,100/- குழந்தைகள் : Rs. 650/- (5 முதல் 12 வயது வரை)

குன்னூர் மேட்டுப்பாளையம்: பெரியவர்கள் : Rs. 1,100 /- குழந்தைகள் : Rs. 650 /- (5 முதல் 12 வயது வரை)

இரண்டாம் வகுப்பு:

மேட்டுப்பாளையம் - குன்னூர் : பெரியவர்கள் : Rs.800 /- குழந்தைகள் : Rs. 500 /-(5 முதல் 12 வயது வரை)

குன்னூர் - மேட்டுப்பாளையம்: பெரியவர்கள் : Rs. 800 /- குழந்தைகள் : Rs. 500 /-(5 முதல் 12 வயது வரை)

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டியதில்லை.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...