ஐ.பி.எல். 2018 சீசனுக்கான அதிகாரப்பூர்வ பாடல் வெளியீடு

அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். 2018 சீசனுக்காக அதிகாரப்பூர்வப் பாடலை பி.சி.சி.ஐ., இன்று வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். 2018 சீசனுக்காக அதிகாரப்பூர்வப் பாடலை பி.சி.சி.ஐ., இன்று வெளியிட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் சர்வதேச அளவில் பிரபலம் அடைந்துள்ளது. வெற்றிகரமாக 10 சீசன்களை கடந்த ஐ.பி.எல்., இந்த வருடத்தில் 11-வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. இந்தப் போட்டிகள் ஏப்ரல் 7-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த சீசனுக்கான அதிகாரப்பூர்வ பாடலை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. பி.சி.சி.ஐ. மற்றும் ஸ்டார் இந்தியா இரண்டும் இணைந்து இந்த பாடலை உருவாக்கியுள்ளது. இதற்கு BEST vs BEST என பெயரிடப்பட்டுள்ளது. டிவி, ரேடியோ மற்றும் டிஜிட்டல் ஆகியவற்றுக்கு ஏற்றவகையில் இந்தி, தமிழ், பெங்காலி, கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்க இயக்குனர் டான் மேஸ் இயக்க, ராஜீவ் வி. பல்லா இசையமைக்க சித்தார்த் பஸ்ருர் ஐந்து மொழிகளில் பாடியுள்ளார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....