தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு: தயாநிதி, கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு தொடர்பான வழக்கிலிருந்து தயாநிதி, கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு தொடர்பான வழக்கிலிருந்து தயாநிதி, கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, கலாநிதிமாறன், தயாநிதி மாறன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

புதிய தொழில்நுட்பங்களை முழுமையாக புரிந்து கொள்ளாமல் 764 இணைப்புகள் என சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்திருப்பதாக மாறன் சகோதரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. பைலட் நம்பர்களில் இருந்து சைல்டு நம்பர்கள் எடுக்கப்பட்டதாகவும், சைல்டு நம்பர்களை தொலைபேசி இணைப்பாக கணக்கில் கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டது. 

ஆனால், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதாகவும் யாரையும் விடுவிக்க கூடாது என்றும் சி.பி.ஐ. தரப்பில் தெரிவித்திருந்தது. இதனிடையே, நீதிபதி உத்தரவின் பேரில் சி.பி.ஐ. தரப்பில் எழுத்து பூர்வ வாதங்களும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் தயாநிதி, கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்துள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...