ஆதிவாசி இளைஞர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

திருடன் என்று கூறி ஆதிவாசி இளைஞர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: திருடன் என்று கூறி ஆதிவாசி இளைஞர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர். கூலித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று கோத்தகிரியில் வீட்டுப் பொருட்களை வாங்கி முடித்து விட்டு பேருந்து நிலையம் சென்றார். அப்போது அங்கிருந்த பெண் மீது எதிர்பாராத விதமாக கை பட்டதாகத் தெரிகிறது.



இதை தவறாக எடுத்துக்கொண்ட அவர் திருடன், திருடன், என்று கூச்சலிடவே, அங்கு இருந்த போலீசார் முருகனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அங்கு சரமாரியாக முருகனைத் தாக்கியதாக தெரிகிறது. இரவு வரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட முருகன் இரவு சுமார் 9 .30 மணியளவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முருகன் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரர் சம்மந்தப்பட்ட பெண் புகார் அளிக்காத நிலையில் எப்படி இவரை அடிக்கலாம்? என்று போலீசாரிடம் கேட்டுள்ளார். ஆனால், காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் சரியான பதில் கூறாமல் முருகனை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து, முருகனின் உறவினர்கள் அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். 

விசாரணை என்கிற பெயரில் முருகனைத் தாக்கிய காவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த தகவல் கிடைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா முருகனை அழைத்து விசாரணை நடத்தினார். இச்சம்பவத்தை பற்றி காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறுகையில், "காவலர்களால் தாக்கப்பட்டார் என்பது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...