கால்நடை மருத்துவர் பற்றாக்குறை : காயங்களுடன் சுற்றித் திரியும் காட்டு யானை

நீலகிரி மாவட்டம் முதுமலையில் கால்நடை மருத்துவர் பற்றாக்குறையால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக காலில் காயங்களுடன் மக்னா யானை சுற்றி வருகிறது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலையில் கால்நடை மருத்துவர் பற்றாக்குறையால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக காலில் காயங்களுடன் மக்னா யானை சுற்றி வருகிறது.



கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றித்திரியும் மக்னா யானை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒவேலி பகுதிக்கு வந்தது. அப்போது, அந்த யானையின் காலில் ஏற்பட்ட காயத்தால் அதனால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 10 நாட்களாக கிளன்வன்ஸ் பகுதியில் உள்ள பள்ளத்தில் நடக்க முடியாமல் நின்று வருகிறது. முன்னங்கால் இரண்டிலும் அதிக வீக்கம் உள்ளது. வன ஊழியர்கள் அந்த யானைக்கு வாழைத்தண்டு, வாழைப்பழம், தழைகளை கொடுத்து வருகின்றனர். இதனால், அந்த யானையின் உடல்நிலையில் ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. யானைக்கு உணவு வழங்கும் வனத்துறையினர், அதற்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 



கடந்த 10 நாட்களாக யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. முதுமலையில் கால்நடை மருத்துவர் இல்லாமல் இருப்பதே சிகிச்சை அளிக்க தாமதமாவதாக வனத்துறை தரப்பில் கூறப்படுகின்றது. இந்த யானைக்கு கோவையில் இருந்து மருத்துவர்கள் வந்த பிறகே, சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. வனத்துறை தாமதிக்காமல் காயங்களுடன் தவித்து அந்த மக்னா யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானையின் உடல்நலத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...