3 மக்களவை தொகுதிகளிலும் பா.ஜ.க தோல்வி : சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி கட்சிகள் வெற்றி

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், புல்புர் தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியும், பீகாரின் அராரியா தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் பா.ஜ.க.வை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், புல்புர் தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியும், பீகாரின் அராரியா தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் பா.ஜ.க.வை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க., ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அங்கு, கோரக்பூர், புல்புர் மற்றும் பீகார் மாநிலம் அராரியா மக்களவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. கோரக்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் உபேந்திர தத் சுக்லாவை சுமார் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன் குமார் நிஷாத் வீழ்த்தினர். 

கோரக்பூர் தொகுதியில் கடந்த ஐந்து முறையும் நடந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தது. புல்புர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சியின் நாகேந்திர பிரதாப்சிங் தோற்கடித்தார். இந்த தொகுதியும் பா.ஜ.க. வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பீகாரின் அராரியா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளர் சுமார் 61 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதே மாநிலத்தில் இரு சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஒரு தொகுதியிலும், பா.ஜ.க. ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. கோரக்பூர் மற்றும் புல்புர் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...