காத்திருப்போர் பட்டியலில் ரயில் பயணச்சீட்டை உறுதி செய்ய புதிய செயலி அறிமுகம்

ரயில் பயணங்களின் போது காத்திருக்கும் பயணியர் பட்டியலில் (RAC) பயணச்சீட்டை உறுதி செய்ய டிஜிட்டல் முறையிலான செயலி (ஆப்) காவல் ஆணையர் அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

கோவை : ரயில் பயணங்களின் போது காத்திருக்கும் பயணியர் பட்டியலில் (RAC)  பயணச்சீட்டை உறுதி செய்ய டிஜிட்டல் முறையிலான செயலி (ஆப்) காவல் ஆணையர் அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையாளர் பெரியய்யா முன்னிலையில் இந்த செயலி அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. 



"கோவை நுகர்வோர் இயக்கம்" என்ற அமைப்பு இந்த செயலியை உருவாக்கியுள்ளது. செயலியை உருவாக்கிய ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகரிடம் இந்த செயலி இருந்தால், சார்ட்-க்கு பதிலாக இந்த செயலியை வைத்து ரயில் பெட்டியில் பயணம் செய்பவர்கள் எத்தனைப் பேர், அவர்களுடைய விபரத்தை எளிமையாக டிஜிட்டல் முறையில் பெறலாம். இந்த விபரத்தை அடிப்படையாக வைத்து அடுத்த ரயில் நிலையம் வருவதற்குள்ளோ, பயணிகள் பயணச்சீட்டை ரத்து செய்தாலோ, காத்திருக்கும் இருக்கைகளில் RAC பயணிகளுக்கு அவர்களுடைய வரிசைப்படி பெர்த் ஒதுக்கீடு செய்ய முடியும்.

மேலும், வயதுமுதிர்ந்த பயனாளிகளுக்கு இருக்கையைப் படுக்கையாக மாற்ற பரிசோதகர் கட்டணம் பெறுவதையும், டிஜிட்டல் முறையாக்குவதன் மூலம் லஞ்சம் போன்றவற்றை தடுக்க முடியும், இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செயலி விளக்கத்தின்போது கோவை நுகர்வோர் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் பங்கேற்றனர். உலக நுகர்வோர் தினம் நாளை கடைப்பிடிக்கப்படுவதை அடுத்து இந்த செயலியின் விளக்கக் கூட்டம் இன்று நடைபெற்றது. மேலும், இந்த செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ரயில்வேயிடம் கோரியிருப்பதாகவும், இன்னும் 2 மாதத்திற்குள்ளாக நடைமுறைக்கு வரும் சாத்தியம் இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...