'தொழில் துறையினர் அபுதாபியுடன் வர்த்தக மேம்பாடு கொள்ள வேண்டும்'

தொழில் துறையினர் அபுதாபியுடன் வர்த்தக மேம்பாடு கொள்ள வேண்டும் என்று அபுதாபி நாட்டின் கலிபா தொழில் பூங்காவின் வர்த்தக மற்றும் வணிக மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் எட்வின் லேமர்ஸ் கூறியுள்ளார்.

கோவை: தொழில் துறையினர் அபுதாபியுடன் வர்த்தக மேம்பாடு கொள்ள வேண்டும் என்று அபுதாபி நாட்டின் கலிபா தொழில் பூங்காவின் வர்த்தக மற்றும் வணிக மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் எட்வின் லேமர்ஸ் கூறியுள்ளார். 

இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை கிளை சார்பில் இந்திய மற்றும் ஐக்கிய நாடுகள் இடையேயான வர்த்தக மேம்பாடு கலந்துரையாடல் கூட்டம் அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது.

இதில், இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை கிளையின் துணை தலைவர் வரதராஜன் பேசுகையில், "ஐக்கிய நாடுகளில் வணிகம் செய்வது எளிமையாகியுள்ளது. இது சிறந்த அடித்தளமாக உள்ளது.



தொடர்ந்து, அபுதாபி கலிபா தொழில் பூங்காவின் வர்த்தக மற்றும் வணிக மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் எட்வின் லேமர்ஸ் பேசுகையில், "அபுதாபி கப்பல் துறைமுகம் உலகளவில் தலை சிறந்து விளங்குகிறது. மேலும், டாடா, தாபர், ஆக்ஸிஸ், அசோக் லேலெண்ட் உள்ளிட்ட 40,000 இந்திய நிறுவனங்கள் அங்கு செயல்படுகிறது. 3 மில்லயன் இந்தியர்கள் அரபு நாடுகளில் வசிக்கின்றனர். சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அபுதாபி தலைவரும் சந்தித்தது தொழில் வர்த்தகத்திற்கு அடித்தளமாக அமைந்தது. பல்வேறு பொருட்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 

கலிபா துறைமுகம் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு முழுமையான துறைமுகமாக செயல்பட்டு வருகிறது. 12 மில்லியன் பொது சரக்குகள் இந்த துறைமுகத்தில் கையாளப்படுகிறது. 

பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அபுதாபியில் தலை சிறந்த விமான நிலையங்களும், உலக தரம் வாய்ந்த சாலை கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. வரும் 2020-ம் ஆண்டு அபுதாபியில் இருந்து மற்ற அரபு நாடுகளுக்குச் செல்ல புகைவண்டி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் வர்த்தகம் மேலும் அதிகரிக்கும். தொழில் துறையினர் அபுதாபியுடன் வர்த்தக மேம்பாடு கொள்ள வேண்டும்." என்றார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...